மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமையும்: வீரப்ப மொய்லி

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜகவை பொது எதிரியாகக் கருதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மத்தியில் ஆட்சியமைக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறினார்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமையும்: வீரப்ப மொய்லி

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜகவை பொது எதிரியாகக் கருதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மத்தியில் ஆட்சியமைக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறினார்.
இதுகுறித்து பிடிஐ செய்தியாளருக்கு அவர் வியாழக்கிழமை அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
காங்கிரஸூக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது சகாக்களின் விமர்சனங்களில் இதை நன்றாகவே உணர முடிகிறது.
காங்கிரஸூம், பிற எதிர்க்கட்சிகளும் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கூட்டணி மூலமாகவோ அல்லது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி மூலமாகவோ ஆட்சியமைக்கும். தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி, பிஜு ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பிராந்திய கட்சிகள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலோ, பாஜக தலைமையிலான கூட்டணியிலோ அங்கம் வகிக்கவில்லை. இந்தக் கட்சிகளின் பொது எதிரியாக, பாஜகவும், நரேந்திர மோடியும் உள்ளனர். இதனால், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விடும். 
நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். ஆகவே, மத்தியில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com