ஜான்சன் - ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டும்: குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்

ஜான்சன் - ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டும் என குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மாநில அரசுகளுக்கு கடிதம்
ஜான்சன் - ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டும்: குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்


ஜான்சன் - ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டும் என குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

குழந்தைகள் தலை குளிக்க பயன்படுத்தப்படும் ஜான்சன்-ஜான்சன் பேபி ஷாம்புகளில் புற்றுநோயை உருவாக்கும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃபார்மால்டிஹைடு என்ற வேதிப்பொருட்கள் இருப்பதாக புகார்கள் வந்தது. 

இதையடுத்து ராஜஸ்தான் மாநில மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஷாம்புகள் வைக்கப்பட்டிருந்த குடோன்களில் சோதனை நடத்தினர். பறிமுதல் செய்த ஷாம்புகளை தர ஆய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அஸ்பெஸ்டாஸ் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில், ஜான்சன்-ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. 

இதனிடையே, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் அறிவுறுத்தல் தொடர்பான எந்த தகவலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும்,  மத்திய மருந்து ஆய்வகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர்தான் முடிவுக்கு வர முடியும் என்று ஜான்சன் பேபி ஷாம்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com