கார் மோதி பத்திரிகையாளர் பலியான விவகாரம்: கைது செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிக்கு மருத்துவமனையில் சிகிச்சை

கேரளத்தில் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று பத்திரிகையாளர் மீது மோதி அவரது உயிரிழப்புக்கு காரணமான விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு

கேரளத்தில் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று பத்திரிகையாளர் மீது மோதி அவரது உயிரிழப்புக்கு காரணமான விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
 குடிபோதையில் காரை ஓட்டி பத்திரிகையாளர் முகமது பஷீரின் இறப்புக்குக் காரணமான ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமனை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 விபத்தின்போது வெங்கடராமனுக்கு காயம் ஏற்பட்டதையடுத்து அவர் கிம்ஸ் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது ரத்தப் பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை. அதனை எதிர்நோக்கியுள்ளோம்.
 அறிக்கை பெற்ற பிறகு இந்த வழக்கில் மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 தற்போது அந்த அதிகாரி மீது இந்திய தண்டனைச் சட்டம் 279 மற்றும் 304 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
 இதனிடையே, கைது செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கு கேரளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
 இதனிடையே, கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "சட்டத்தை மீறி செயல்படும் எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபடாது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை என்பது இயற்கையானது.
 சட்டம் மற்றும் நீதியின் முன்பு அனைவரும் சமம். இதில், தவறு செய்தவர் எந்தப் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறையின் நடவடிக்கை பாயும்' என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com