எங்களை முதுகில் குத்தாதீர்கள்! நெஞ்சில் சுடுங்கள்!: காஷ்மீர் முன்னாள் முதல்வர்  கண்ணீர் பேட்டி 

எங்களை முதுகில் குத்தாதீர்கள்! நெஞ்சில் சுடுங்கள்! என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.
எங்களை முதுகில் குத்தாதீர்கள்! நெஞ்சில் சுடுங்கள்!: காஷ்மீர் முன்னாள் முதல்வர்  கண்ணீர் பேட்டி 

புது தில்லி: எங்களை முதுகில் குத்தாதீர்கள்! நெஞ்சில் சுடுங்கள்! என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ன் வழியாக காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால், மாநிலங்களவையில் திங்களன்று நிறைவேற்றப்பட்டுள்ளன.

மக்களவையில் செவ்வாயன்று இந்த மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. திமுக உறுப்பினர்கள் பேசும்போது பாராளுமன்ற உறுப்பினர் ஃபரூக் அப்துல்லா எங்கே என்று கேள்வி கேட்டர்னர். அதற்கு 'ஃபரூக் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட வில்லை' என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் கூறினார்.

இந்நிலையில் எங்களை முதுகில் குத்தாதீர்கள்! நெஞ்சில் சுடுங்கள்! என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கும், பின்னர் அவர் இல்லத்திற்கு வெளியில் கூடியிருந்த ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியிலும் அவர் கூறியுள்ளதாவது 

நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன்; உள்துறை அமைச்சர் பொய் சொல்கிறார். நான் இந்தியன். நான் என் உரிமைக்காகவும் ஜனநாயகத்துக்காகவும் தொடர்ந்து போராடுவேன்.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 மற்றும் 35A ஆகிய இரண்டும் அரசால் வழங்கப்பட்டது. காஷ்மீர் மக்கள் ஜனநாயகத்திற்காகப் சேர்ந்து போராடுவோம். ஒற்றுமையே எங்களுக்கு வலிமையைத் தரும், உரிமைகளை விட்டுத் தர மாட்டோம். அவர்களை மக்களைப் பிரிக்கலாம். ஆனால் இதயங்களைப் பிரிக்க முடியுமா? எனது மோசமான உடல்நிலையில் காரணமாக நான் மரணமடையக் கூட நேரலாம்.

காஷ்மீர் மக்கள் வீடுகளுக்குள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்  அத்தியாவசிய பொருட்கள் கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த் சூழ்நிலையில் இந்திய மக்கள் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு செய்தது ஜனநாயக விரோத நடவடிக்கை.  எங்களை முதுகில் குத்தாதீர்கள்! நெஞ்சில் சுடுங்கள்! . எனது மகன் ஒமர் அப்துல்லா இப்போது சிறை வைக்கப்பட்டுள்ளார்   

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com