மாநிலமாக இருந்து யூனியன் பிரதேசமாக மாறும் முதல் மாநிலம்.. காஷ்மீர்!

இந்தியாவின் வட எல்லைப் பகுதியில் வீற்றிருக்கும் காஷ்மீர் மாநிலம் தான் முதல் முறையாக மாநிலமாக இருந்து யூனியன் பிரதேசமாக மாறுகிறது. 
மாநிலமாக இருந்து யூனியன் பிரதேசமாக மாறும் முதல் மாநிலம்.. காஷ்மீர்!


புது தில்லி: இந்தியாவின் வட எல்லைப் பகுதியில் வீற்றிருக்கும் காஷ்மீர் மாநிலம் தான் முதல் முறையாக மாநிலமாக இருந்து யூனியன் பிரதேசமாக மாறுகிறது. 

1956ம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக காஷ்மீர் தான் மாநிலமாக இருந்து யூனியன் பிரதேசமாக மாறுகிறது.

மத்திய அரசின் அதிரடி அறிவிப்பின் மூலம் இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்கிறது. அதே சமயம், மாநிலங்களின் எண்ணிக்கை 29ல் இருந்து 28 ஆகக் குறைந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியல்சாசன சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுகின்றன.  

370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்யும் தீர்மானத்தையும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கான மசோதாவையும் மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை கொண்டு வந்தார். 

இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவையும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. எனினும், கடும் அமளிக்கு நடுவே, இது தொடர்பான தீர்மானம் மற்றும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்த தீர்மானம் மற்றும் மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com