'நெஃப்ட்' பணப்பரிவர்த்தனையில் புதிய சலுகை: ரிசர்வ் வங்கி அனுமதி 

வரும் டிசம்பர் மாதம் முதல் 'நெஃப்ட்' முறையின் மூலமாக 24 மணி நேரமும் பணப்பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
'நெஃப்ட்' பணப்பரிவர்த்தனையில் புதிய சலுகை: ரிசர்வ் வங்கி அனுமதி 

புது தில்லி: வரும் டிசம்பர் மாதம் முதல் 'நெஃப்ட்' முறையின் மூலமாக 24 மணி நேரமும் பணப்பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. தற்போதுள்ள நடைமுறையின்படி பணி நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே 'நெஃப்ட்' முறை மூலமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.  அதுவும் ரூ..2 லட்சம் வரையில் பணப்பரிவர்த்தனை செய்யலாம். 

இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் முதல் 'நெஃப்ட்' முறையின் மூலமாக 24 மணி நேரமும் பணப்பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி 'நெஃப்ட்' எனப்படும் நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்பர் (NEFT) மூலமாக 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த முறை அமலுக்கு வரவுள்ளது.

சில்லறை பணம் செலுத்துதல் முறையில் இந்த அறிவிப்பானது ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் முதல், ‘ஆர்.டி.ஜி.எஸ்’. எனப்படும்  ரியல் டைம் செட்டில்மெண்ட் சிஸ்டம் (Real Time Gross Settlement System) மற்றும்  ‘நெஃப்ட்’ முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய கட்டணம் கிடையாது என்று ரிசர்வ் வாங்கி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com