சம்ஜவுதா விரைவு ரயில் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்; இந்திய சினிமாக்களை திரையிடவும் தடை

இந்தியா - பாகிஸ்தான் இடையே இயக்கப்பட்டு வந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது.
சம்ஜவுதா விரைவு ரயில் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்; இந்திய சினிமாக்களை திரையிடவும் தடை


புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே இயக்கப்பட்டு வந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் வாகா எல்லையில் இருந்து அட்டாரி நோக்கி வந்து கொண்டிருந்த சம்ஜவுதா விரைவு ரயில் பாதி வழியில் பாகிஸ்தான் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புக் காரணங்களுக்காக ரயில் சேவை பாதியில் நிறுத்தப்பட்டுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ரயிலில் இருந்த இந்திய பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இது குறித்து மூத்த ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய ரயில்வேயை தொடர்பு கொண்டு, பாதுகாப்புக் காரணங்களுக்காக சம்ஜவுதா விரைவு ரயில் நிறுத்தப்படுவதாக அறிவித்தனர். எந்த பாதுகாப்பு பிரச்னையும் இல்லை, உடனடியாக ரயில் அட்டாரி எல்லையை வந்தடைய வேண்டும் என்று நாங்கள் கூறினோம் என்று தெரிவித்தார்.

அப்படி பாதுகாப்பு பிரச்னை ஏற்பட்டால், சம்ஜவுதா விரைவு ரயிலை, இந்திய ஊழியர்களும், இந்திய பாதுகாவலர்களும் வழி நடத்தி வருவார்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளோம்.

சம்ஜவுதா என்பது ஹிந்தியில் ஒப்பந்தம் என்று அர்த்தமாகும். இந்த ரயிலில் 6 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும் ஏசி 3 டயர் பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் தற்போது தில்லியில் இருந்து இந்திய எல்லையான அட்டாரிக்கும், அங்கிருந்து பாகிஸ்தானின் லாகூர் முதல் வாகா வரையிலும் இயக்கப்பட்டு வருகிறது.

காஷ்மீர் விவகாரத்தைத் தொடர்ந்து இந்திய தூதரை திருப்பி அனுப்பவும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை துண்டித்துக் கொள்ளவும் பாகிஸ்தான் முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில், சம்ஜவுதா விரைவு ரயில் சேவையை நிறுத்தியதோடு, பாகிஸ்தானில் இந்திய சினிமாக்களை திரையிடவும் தடை விதித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com