சுடச்சுட

  

  அவித்த முட்டை ரூ.1700 ஆ? அதிர்ச்சிக் கொடுத்த ஹோட்டல்! அப்போ ஆம்லெட்?? அதுவும்..

  By ENS  |   Published on : 12th August 2019 01:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  egg


  தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான கோழிப் பண்ணைகள் இருக்கின்றன. இங்கிருந்துதான் பரவலாக முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இருப்பு மற்றும் தேவைக்கேற்ப முட்டையின் விலை நாமக்கல்லில் நிர்ணயிக்கப்படுகிறது.

  சரி இதை எதற்கு சொல்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா? ஆம் இந்த செய்தியே முட்டையைப் பற்றியது அல்லவா? அதனால் அதன் வரலாறு கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம் என்று நினைத்து இதையெல்லாம் சொல்லிவிட்டோம்.

  மன்னிக்கவும் வாருங்கள் நேராக செய்திக்குள் குதிக்கலாம்.

  சண்டிகரில் இரண்டு வாழைப்பழங்கள் ரூ.442 பில் போடப்பட்ட சம்பவம் கடந்த மாதம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு ஒப்பாக தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு பில் எது தெரியுமா, மும்பையில் உள்ள ஃபோர் சீசனல் ஹோட்டல் எனப்படும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இரண்டு அவித்த முட்டையின் விலை ரூ.1700 என்பதுதான். 

  கார்த்திக் தார் என்பவர் இந்த பில்லை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். ஒரு  சாதாரண உணவு பொருளான அவித்த முட்டையே இந்த அளவுக்கு பில் போடப்பட்டிருப்பதைப் பார்த்த சமூக வலைத்தளப் போராளிகள் இதனை வைரலாக்கியுள்ளனர்.

  இந்த பில்லில் அவித்த முட்டை மட்டுமல்ல, ஒரு ஆம்லெட் ரூ.850க்கும், இரண்டு ஆம்லெட் ரூ.1700க்கும் பில் போடப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் இருந்து பலவாறான கருத்துகள் டிவிட்டரில் வந்து குவிந்து வருகிறது.

  இங்கு நான்கு பருவக் காலத்துக்குமான ஒட்டுமொத்த காலை உணவுச் செலவை ஒரே காலை உணவுக்கு வாங்கிக் கொள்வார்களோ..

  தங்கம் விலையே இதைவிடக் குறைவுதான் போல..

  கோழிகள் எல்லாம் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் என்று இன்றுதான் தெரிந்தது என்றெல்லாம் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

  இங்க பிரியாணியெல்லாம் வாங்கணும்னா வங்கியில லோன் தான் போடணும் போல இருக்கே அப்படினு நம்ம மைண்ட் வாய்ஸ் சொல்கிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai