இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஜம்மு-காஷ்மீர் காவல் துறை!

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காவல் துறையும், சட்டம்-ஒழுங்கும் துணைநிலை ஆளுநர் மூலமாக மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வரவிருக்கின்றன. நிலம் மற்றும் வரி வருவாய் விவகாரங்கள் அங்கு
இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஜம்மு-காஷ்மீர் காவல் துறை!

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காவல் துறையும், சட்டம்-ஒழுங்கும் துணைநிலை ஆளுநர் மூலமாக மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வரவிருக்கின்றன. நிலம் மற்றும் வரி வருவாய் விவகாரங்கள் அங்கு தேர்ந்தெடுக்கப்படும் யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

இதுதொடர்பாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது: 

ஜம்மு-காஷ்மீர் மாநிலமானது, ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மறுசீரமைப்புச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார். அதன்படி, இரு யூனியன் பிரதேசங்களும் அக்டோபர் 31-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.

இவற்றில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சட்டப்பேரவை இருக்கும்; துணைநிலை ஆளுநர் இருப்பார். அவர் மூலமாக, காவல் துறையும், சட்டம்-ஒழுங்கு அமைதியும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும். அதே சமயம், நில உரிமை, விவசாய நிலங்கள் பத்திரப் பதிவு, வேறு ஒருவர் பெயருக்கு மாற்றுதல், விவசாயக் கடன்கள், வரி வருவாய், நில அளவை ஆகியவை தேர்ந்தெடுக்கப்படும் யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

ஆனால், தில்லியில் காவல் துறை, சட்டம்-ஒழுங்கு மட்டுமன்றி நிலம் தொடர்பான விவகாரங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. நிலம் தொடர்பான விவகாரங்களை, தில்லி வளர்ச்சி ஆணையம் மூலம் துணைநிலை ஆளுநர் நேரடியாகக் கவனித்து வருகிறார்.

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு துணைநிலை ஆளுநர் இருப்பார். ஆனால், சட்டப்பேரவை கிடையாது. காவல் துறை, சட்டம்-ஒழுங்கு, நில விவகாரங்கள் ஆகிய மூன்றும் துணைநிலை ஆளுநர் மூலமாக மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும். ஜம்மு-காஷ்மீர், லடாக் இரு யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவான நீதிமன்றமாக ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றம் இருக்கும்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஊழல் கண்காணிப்புத் துறை ஆகியவை துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருக்கும். யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் வராது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com