நேற்று வரை ஒரு சீட் கூட இல்லை, இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி: இது சிக்கிம் பாஜக கதை

சிக்கிமில், சிக்கிம் ஜனநாயக முன்னணி எம்எல்ஏ-க்கள் 10 பேர் இன்று (செவ்வாய்கிழமை) பாஜகவில் இணைந்தனர். 
நேற்று வரை ஒரு சீட் கூட இல்லை, இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி: இது சிக்கிம் பாஜக கதை


சிக்கிமில், சிக்கிம் ஜனநாயக முன்னணி எம்எல்ஏ-க்கள் 10 பேர் இன்று (செவ்வாய்கிழமை) பாஜகவில் இணைந்தனர். 

சிக்கிமில் மொத்தம் 32 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளது. அங்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பவன்குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி அரசு 15 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியைப் பறிகொடுத்தது.

இந்த நிலையில், சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் எம்எல்ஏ-க்கள் 10 பேர் பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பொதுச்செயலாளர் ராம் மாதவ் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். ஒரு கட்சியின் மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் வேறு ஒரு கட்சியில் இணைந்தால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது.

இதன்மூலம், சிக்கிம் சட்டப்பேரவையில் நேற்று வரை ஒரு உறுப்பினர் கூட இல்லாமல் இருந்த பாஜக, இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com