சுடச்சுட

  
  OmBirlaPranabMukherjee_Iev4wpE

   

  மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது இல்லத்தில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு தொடர்பாக பிரணாப் முகர்ஜி கூறுகையில்,

  மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா எனது இல்லத்துக்கு வந்ததில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். மக்களவை உறுப்பினராக இருந்தது முதல் ஓம் பிர்லாவை நான் நன்கு அறிவேன். ஆனால், இதுவரை ஓம் பிர்லா உடன் உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில்லை. 

  மிகப்பெரிய பிரச்னைகளுக்கு மத்தியில் மக்களவை நடைபெற்றது. இருப்பினும் தனது சிறப்பான செயல்பாட்டால் மக்களவை தடையின்றி ஆக்கப்பூர்வமாக தொடர்ந்து நடத்தி முடித்தார். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு மக்களவை உறுப்பினரின் குரலும் ஒலிக்கும் விதமாகவும், பெரும்பாலான கோரிக்கைகளை வெளிப்படுத்தும் விதமாகவும் மக்களவையை சிறப்பாக வழிநடத்தினார் என்று தெரிவித்தார்.

  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு சமீபத்தில் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கௌரவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai