ஆந்திரம்: எண்ணெய்க் கப்பலில் தீ: ஒருவர் பலி

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடலோர எண்ணெய்க் கப்பலில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஒருவர் உயிரிழந்தார்; 13 பேர் காயமடைந்தனர். 
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகே திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்ட கோஸ்டல் ஜாகுவார் எண்ணெய்க் கப்பலில் இருந்து கடலில் குதித்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட கடலோரக் காவல் படையினர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகே திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்ட கோஸ்டல் ஜாகுவார் எண்ணெய்க் கப்பலில் இருந்து கடலில் குதித்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட கடலோரக் காவல் படையினர்.


ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடலோர எண்ணெய்க் கப்பலில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஒருவர் உயிரிழந்தார்; 13 பேர் காயமடைந்தனர். 
இந்த விபத்து தொடர்பாக, காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளர் டி. மோகன் ராவ் கூறியதாவது:
ஆந்திரத்தின் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகே ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துக்காகப் பணியில் ஈடுபட்டு வந்த கோஸ்டல் ஜாகுவார் எண்ணெய்க் கப்பலில் திங்கள்கிழமை காலை 11.30 மணியளவில் பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டது. 
இதனால், அந்தக் கப்பலில் தீ வேகமாகப் பரவியது. இதையடுத்து, கப்பலில் இருந்த 29 பேரும் கடலில் குதித்தனர்.
கப்பலில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால், அந்த இடமே கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல் படையின் அதிவிரைவுக் கப்பலான ராணி ரஷ்மோனி, மீட்புப் பணிகளுக்காக சம்பவ இடத்துக்கு விரைந்தது. மற்ற சில கப்பல்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
கடலோரக் காவல் படையின் 2 கப்பல்களும், ஹெலிகாப்டரும் மீட்பு மற்றும் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டன. இந்த விபத்தில் 27 பேர் மீட்கப்பட்டனர்; ஒருவர் உயிரிழந்தார்; மாயமான ஒருவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 
இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்தனர். அதில் 5 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை. எண்ணெய்க் குழாயைப் பொருத்தும்போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்றார் டி. மோகன் ராவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com