மல்யுத்த வீராங்கனை பபிதா போகட் பாஜகவில் இணைந்தார்

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை பபிதா போகட் மற்றும் அவரது தந்தையும், மல்யுத்த பயிற்சியாளரான மஹாவீர் போகட்ஆகியோர் திங்கள்கிழமை பாஜகவில் இணைந்தனர்.
தில்லியில் பாஜக தலைமையகத்தில் திங்கள்கிழமை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு முன்னிலையில் பாஜகவில் இணைந்த மஹாவீர் போகட்(வலது),  பபிதா போகட்(இடது).
தில்லியில் பாஜக தலைமையகத்தில் திங்கள்கிழமை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு முன்னிலையில் பாஜகவில் இணைந்த மஹாவீர் போகட்(வலது),  பபிதா போகட்(இடது).


காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை பபிதா போகட் மற்றும் அவரது தந்தையும், மல்யுத்த பயிற்சியாளரான மஹாவீர் போகட்ஆகியோர் திங்கள்கிழமை பாஜகவில் இணைந்தனர்.
தில்லியில் பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு, ஹரியாணா மாநில பாஜக பொதுச் செயலாளர் அனில் ஜெயின் மற்றும் அந்த மாநில பாஜக தலைவர் சுபாஷ் படாலா ஆகியோர் முன்னிலையில் பபிதா மற்றும் மஹாவீர் போகட் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.
அதன் பின்னர் கிரண் ரிஜிஜு பேசுகையில்,  சர்வதேச அளவில் நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்காக பல பதக்கங்களை பபிதா போகட் பெற்றுத் தந்துள்ளார். அவரது தந்தை மஹாவீர் போகட்தனது இரு பெண்களுக்கும் பயிற்சியாளராக இருந்து அவர்களை வெற்றி பெறச் செய்துள்ளார். இவர்கள் இருவரும் பாஜகவில் இணைந்தது கட்சிக்கு மிகுந்த பெருமையை சேர்க்கும் என்றார்.
ஹரியாணாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் பிரபலங்களாக இருக்கும் போகட் குடும்பத்தினர் கட்சியில் இணைந்தது தேர்தலில் வெற்றி பெற உதவியாக இருக்கும் என பாஜக கருதுகிறது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டபோது, பபிதா போகட்பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் மல்யுத்தப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கத்தைப் பெற்று தந்தவர் கீதா போகத். அதைத் தொடர்ந்து அவரது சகோதரி பபிதா போகத்தும், கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்றார். அவர்கள் இருவரும் மல்யுத்தப் பிரிவில் வெற்றி பெறுவதற்கு மஹாவீர் போகட்கடுமையாக பயிற்சியளித்தார். 
கடந்த 2016-ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான தங்கல் என்ற திரைப்படம், போகட் சகோதரிகள், மஹாவீர் போகட்ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com