தில்லி மாநகரப் பேருந்தில் நாளை பெண்களுக்கு மட்டும் இலவச பயணம்: ஏன் தெரியுமா?

தில்லி மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் ஆகஸ்ட் 15ம் தேதியான நாளை இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி மாநகரப் பேருந்தில் நாளை பெண்களுக்கு மட்டும் இலவச பயணம்: ஏன் தெரியுமா?


தில்லி மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் ஆகஸ்ட் 15ம் தேதியான நாளை இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15ம் தேதி ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பெண்களுக்கு இந்த சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினமான நாளை ஏசி மற்றும் ஏசி அல்லாத பேருந்துகளில் பெண் பயணிகள் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், நாளை சுதந்திர தினம் என்பதால், புது தில்லியில் கடுமையான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் என்பதையும் பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதுகுறித்து தில்லி போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் குறித்தும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் செய்தியை அனுப்பியுள்ளது.

அதன்படி, நேதாஜி சுபாஷ் மார்ஷ், லோதியான் ரோடு, எஸ்.பி. முகர்ஜி மார்க், சாந்திரி சௌக் சாலை, நிஷாத் ராஜ் மார்க், எஸ்பிளனேடு சாலை, லிங்க் ரேர்டு, ரிங் ரோடு, ராஜ்காட் முதல் ஒய் பாயிண்ட் வரை - ஹனுமன் சேது ஆகிய சாலைகள் நாளை காலை 4 மணி முதல் காலை 10 மணி வரை பொதுப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேப்போல, தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ஆகஸ்ட் 14ம் தேதி காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி மதியம் 2 மணி வரையிலும் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com