அமெரிக்காவில் மோடியின் நிகழ்ச்சிக்கு 40 ஆயிரம் பேர் முன்பதிவு

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவிருக்கும் இந்திய-அமெரிக்கர்கள் மாநாட்டுக்கு 40 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.


அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவிருக்கும் இந்திய-அமெரிக்கர்கள் மாநாட்டுக்கு 40 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் ஐ.நா.பொதுச் சபையின் 74-ஆவது ஆண்டு கூட்டத்தின் பொது விவாதம் செப்டம்பர் 24- ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் செப்டம்பர் 28-ஆம் தேதி காலை மோடி உரையாற்றவுள்ளார். 
ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வசிக்கும் இந்தியர்களுடன் செப்டம்பர் 22-ஆம் தேதி மோடி உரையாற்றவுள்ளார். மோடி பங்úற்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இதுவரை 40,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு நுழைவு கட்டணம் ஏதும் இல்லை. எனினும், இலவச முன் அனுமதிச்சீட்டு பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம். இதுவரை 40,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். மோடி உரையாற்றவிருக்கும் நிகழ்ச்சியில் 50,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என்றனர்.
இதுதொடர்பாக ஹூஸ்டன் நகர மேயர் கூறுகையில், ஹூஸ்டனுக்கு பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன். அமெரிக்காவில் இந்தியர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதியாக ஹூஸ்டன் உள்ளது. பிரதமர் மோடியின் வருகை, இந்தியாவுடனான எங்களது உறவை மேலும் வலுப்படுத்தும்.
 வர்த்தகம், கலாசாரப் பகிர்வு, சுற்றுலா என அனைத்து உறவுகளும் மேம்படும். ஹூஸ்டனில் உள்ள அனைத்து மக்களும் இதனால் பயனடைவார்கள். இந்த மாநாட்டுக்கான முன்அனுமதிச் சீட்டு விற்பனை தொடங்கப்பட்ட முதல் 2 வாரத்திலேயே 40,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஹூஸ்டனில் உள்ள அனைத்து மக்களும் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார். 
கடந்த 2014-ஆம் ஆண்டு இந்திய பிரதமராக பதவியேற்ற பின்னர், அமெரிக்காவில் இந்திய சமூகத்தினரிடையே மோடி உரையாற்றவிருப்பது இது 3-ஆவது முறையாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com