ராகுல் காந்திக்கு காஷ்மீர் ஆளுநர் விடுத்தது உண்மையான அழைப்பு அல்ல: ப.சிதம்பரம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள நிலைமையை நேரில் பார்வையிடுவதற்காக மாநிலத்துக்கு நேரில் வருமாறு ராகுல் காந்திக்கு அந்த மாநில ஆளுநர் சத்யபால்
ராகுல் காந்திக்கு காஷ்மீர் ஆளுநர் விடுத்தது உண்மையான அழைப்பு அல்ல: ப.சிதம்பரம்


ஜம்மு-காஷ்மீரில் உள்ள நிலைமையை நேரில் பார்வையிடுவதற்காக மாநிலத்துக்கு நேரில் வருமாறு ராகுல் காந்திக்கு அந்த மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் விடுத்தது உண்மையான அழைப்பு அல்ல; அது பிரசாரத்துக்கான கருவி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் குறைகூறினார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல்சாசனத்தின் 370ஆவது சட்டப் பிரிவை மத்திய அரசு அண்மையில் நீக்கியது. இதையடுத்து அந்த மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 
முன்னாள் முதல்வர்களான ஒமர் அப்துல்லா,  மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீரில் வன்முறை ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். அவரது இந்தக் கருத்தை மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் மறுத்தார். மேலும், ஜம்மு-காஷ்மீர் நிலைமையை நேரில் பார்வையிட வருமாறு ராகுலுக்கு அழைப்பு விடுத்த அவர், அதற்காக ஒரு விமானத்தை ஏற்பாடு செய்யவும் தயார் என்று கூறியிருந்தார்.
அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, தனக்கு விமானம் தேவையில்லை என்றும் காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களைச் சந்திப்பதற்கு அனுமதி தர வேண்டும் என்று கோரியிருந்தார்.
இது குறித்து ஆளுநர் கூறுகையில், ராகுல் காந்தி காஷ்மீருக்கு வர பல்வேறு முன் நிபந்தனைகளை விதிப்பதாக ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியிருந்தார். 
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் காட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் டுவிட்டரில் புதன்கிழமை வெளியிட்ட பதிவொன்றில் கூறியிருப்பதாவது:
ராகுல் காந்திக்கு அந்த மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் விடுத்தது உண்மையான அழைப்பு அல்ல; அது பிரசாரத்துக்கான கருவி. ராகுல் முன் நிபந்தனைகளை விதிப்பதாகக் கூறுவது அபத்தமானது.
காஷ்மீரில் படைவீரர்கள் உள்பட அனைவரையும் சந்திப்பதற்கான அனுமதியை மட்டுமே ராகுல் கோரியிருந்தார். இது எப்படி முன் நிபந்தனை விதிப்பதாக ஆகும்? என்று அந்தப் பதிவில் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com