ராஜ்நாத் சிங் இல்லத்தில் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் திடீர் ஆலோசனை

ராஜ்நாத் சிங் கருத்தை அடுத்து அவரது இல்லத்தில் அமித் ஷா நடத்தியிருக்கும் இச்சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ராஜ்நாத் சிங் இல்லத்தில் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் திடீர் ஆலோசனை

அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற இந்தியாவின் கொள்கை எதிர்காலத்தில் மாறுதலுக்கு உள்ளாகலாம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். 

அணு சக்தியை பொறுப்புடன் பயன்படுத்தும் நாடு என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்குமான பெருமையாகும். இதற்காக இந்த தேசம் வாஜ்பாய்க்கு என்றும் கடமைப்பட்டுள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறியிருந்தார். 

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்நிலையில், தில்லியில் உள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை பிற்பகல் திடீர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில் மத்திய அமைச்சர்கள் சிலர் கலந்துகொண்டனர்.

ராஜ்நாத் சிங் கருத்தை அடுத்து அவரது இல்லத்தில் அமித் ஷா நடத்தியிருக்கும் இச்சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com