நேரு குடும்பத்தைச் சேராதவர் காங்கிரஸை வழிநடத்துவது மிகவும் கடினம்: அதீர் ரஞ்சன் சௌதரி

நேரு குடும்பத்தைச் சேராத தலைவர் யாரும் காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவது மிகவும் கடினம் என்று என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி தெரிவித்துள்ளார்.
நேரு குடும்பத்தைச் சேராதவர் காங்கிரஸை வழிநடத்துவது மிகவும் கடினம்: அதீர் ரஞ்சன் சௌதரி

நேரு குடும்பத்தைச் சேராத தலைவர் யாரும் காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவது மிகவும் கடினம் என்று என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பிடிஐ செய்தியாளருக்கு கொல்கத்தாவில் அளித்த பேட்டியில் கூறியிருப்பது:
காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் புத்துயிரூட்டுவது என்பது கொள்கையற்ற மாநிலக் கட்சிகள் பலவீனமடைவதில்தான் இருக்கிறது. வலுவான கொள்கைப் பிடிப்புள்ள, இந்தியா முழுவதும் பரவியுள்ள காங்கிரஸைப் போன்ற ஒரு கட்சியால்தான் பாஜக-வின் மதவாத அரசியலுக்கு பதிலடி கொடுக்க முடியும்.
மாநிலக் கட்சிகள் செயல்படும் விதத்தைப் பார்க்கும்போது அவை விரைவில் முக்கியத்துவத்தை இழக்கும் என்று தோன்றுகிறது. அக்கட்சிகள் முக்கியத்துவத்தை இழக்கும்போது நாடு இரு துருவ அரசியலை நோக்கி நகரும். அந்தச் சூழலில் நாங்கள் (காங்கிரஸ்) மீண்டும் ஆட்சிக்கு வருவோம். எனவே காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. மாநிலக் கட்சிகளுக்கு காங்கிரஸ் போன்றதொரு தேசியக் கட்சிக்கு இருப்பதைப் போல் மக்கள் ஆதரவு இல்லை.
சோனியா காந்தி காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு மீண்டும் வர மிகவும் தயங்கினார். ஆனால் ராகுல் காந்தியின் ராஜிநாமாவைத் தொடர்ந்து கட்சி ஒரு நெருக்கடியை சந்தித்த நிலையில் மூத்த நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று தலைவர் பதவியை ஏற்க சோனியா சம்மதித்தார்.
நெருக்கடியான நேரங்களில் எல்லாம் அவர் கட்சியை வழிநடத்தியுள்ளார். அவரது தலைமையில்தான் கட்சியால் இக்கட்டான நேரங்களில், 2004 மற்றும் 2009 என இரு முறை ஆட்சி அமைக்க முடிந்தது.
சோனியா காந்தி தற்போது கட்சியின் இடைக்காலத் தலைவராக இருக்கும் அதே நேரத்தில், கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்ந்தெடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் கட்சியை வழிநடத்துவது மிகவும் கடினம்.
வர்த்தகத்தைப் போலவே, அரசியலிலும் ஒரு குறிப்பிட்ட பெயர் மற்றும் புகழ் அவசியம். இப்போதைய பாஜகவை கவனித்தால் நரேந்திர மோடி அல்லது அமித் ஷா இல்லாமல் அக்கட்சி சுமுகமாக இயங்குமா? என்ற கேள்வி எழுகிறது. இயங்காது என்பதே அதற்கு பதில்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியிலும் நேரு குடும்பத்துக்கு ஒரு பெயர் இருக்கிறது. அதில் எந்தத் தவறும் இல்லை. அக்குடும்பத்தினருக்கு இருப்பதைப் போன்ற மக்கள் ஈர்ப்பு சக்தி கட்சியில் வேறு யாருக்கும் இல்லை. இது கடினமான எதார்த்த நிலையாகும் என்று அதீர் ரஞ்சன் சௌதரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com