"3 மாநில பேரவைத் தேர்தலை தற்போதைய முதல்வர்கள் தலைமையில் பாஜக சந்திக்கும்'

மகாராஷ்டிரம், ஹரியாணா, ஜார்க்கண்ட் ஆகிய மூன்று மாநில சட்டப் பேரவைத் தேர்தலை தற்போதைய முதல்வர்களின் தலைமையிலேயே பாஜக சந்திக்கும் என்று அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
"3 மாநில பேரவைத் தேர்தலை தற்போதைய முதல்வர்கள் தலைமையில் பாஜக சந்திக்கும்'

மகாராஷ்டிரம், ஹரியாணா, ஜார்க்கண்ட் ஆகிய மூன்று மாநில சட்டப் பேரவைத் தேர்தலை தற்போதைய முதல்வர்களின் தலைமையிலேயே பாஜக சந்திக்கும் என்று அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாஜக ஆட்சி நடைபெறும் இந்த மூன்று மாநிலங்களிலும் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், பாஜக இப்போதே பிரசாரப் பொதுக் கூட்டங்களை நடத்தி, தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது.

ஹரியாணாவின் ஜீந்த் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் அமித் ஷா பங்கேற்றுப் பேசினார். முதல்வர் பதவிக்கு மனோகர் லால் கட்டரையே கட்சி மீண்டும் தேர்வு செய்துள்ளதை அவரது பேச்சு தெளிவுபடுத்தியது. மாநிலத்தில் கட்டர் அரசு மீண்டும் அமைவதற்கு பேரவையில் மொத்தமுள்ள 90 இடங்களில் 75 இடங்களில் பாஜகவை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று அமித் ஷா, வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதேபோல், மகாராஷ்டிரத்தில் தேவேந்திர ஃபட்னவீஸூம், ஜார்க்கண்டில் ரகுவர் தாஸூம் மீண்டும் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து கட்சித் தலைவர் ஒருவர் கூறுகையில், "இந்த மூன்று மாநில முதல்வர்களும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி புரிந்துள்ளனர்.

அவர்களின் சிறப்பான செயல்பாடு இத்தேர்தலில் எங்களின் பிரசார அம்சங்களில் ஒன்றாக இருக்கும். இந்த மாநிலங்களில் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்களே மீண்டும் முதல்வர் பதவிக்கு வருவார்கள்' என்று தெரிவித்தார்.

பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "இந்த மூன்று தலைவர்களும் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை நடத்தியுள்ளனர். அந்த மாநிலங்களில் இருந்த முந்தைய அரசுகள் மிகப்பெரிய ஊழல் விவகாரங்களில் சிக்கியிருந்தன. கட்டரோ, ஃபட்னவீúஸா, ரகுவர் தாúஸா - அவர்களுக்கு மக்களிடையே ஊழல் கறை படியாத தலைவர்கள் என்ற நற்பெயர் உள்ளது' என்றார்.

மத்திய அரசின் சமீபத்திய முடிவுகளுக்கு கிடைத்த மக்கள் ஆதரவு, மூன்று மாநில அரசுகளின் செயல்பாடுகள், எதிர்க்கட்சிகளிடையே நிலவும் ஒற்றுமையின்மை ஆகிய காரணங்களால் இந்த மாநிலங்களில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என்ற நம்பிக்கையுடன் பாஜக உள்ளது.

மகாராஷ்டிரம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களிலும் மோடியின் தனிப்பட்ட செல்வாக்கு பெரிய அளவில் உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல்சாசனத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கை மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாகவும், அதனால்தான் சில எதிர்க்கட்சிகள் கூட அதை ஆதரித்தன என்றும் பாஜக கருதுகிறது.

மேலும் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மூன்று மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிரபலமான உள்ளூர் தலைவர்களை பாஜகவில் இணைத்ததும் கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளதாக அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014 சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக ஹரியாணாவில் 47 இடங்களிலும், மகாராஷ்டிரத்தில் 122 இடங்களிலும், ஜார்க்கண்டில் 37 இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com