370-ஆவது பிரிவு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது பிரிவு தொடர்பான மத்திய அரசின் முடிவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பாதுகாப்புத் துறை முன்னாள் அதிகாரிகள், ஐஏஎஸ் முன்னாள் அதிகாரிகள் ஆகியோர் மனு தாக்கல்
370-ஆவது பிரிவு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது பிரிவு தொடர்பான மத்திய அரசின் முடிவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பாதுகாப்புத் துறை முன்னாள் அதிகாரிகள், ஐஏஎஸ் முன்னாள் அதிகாரிகள் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தக் குழுவின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் ராதா குமார், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் அமிதாபா பாண்டே, கோபால் பிள்ளை, ஹிண்டால் ஹைதர் தியாப்ஜி, விமானப்படை முன்னாள் துணைத் தளபதி கபில் காக், இந்திய ராணுவ முன்னாள் மேஜர் ஜெனரல் அசோக் குமார் மேத்தா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில்,  "ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது பிரிவை ரத்து செய்யும் குடியரசுத் தலைவரின் உத்தரவை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது, செல்லாது என்று அறிவிக்க வேண்டும்; ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம்-2019-ஐயும் செல்லாதது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது, ஜம்மு-காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது ஆகியவற்றை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் கடந்த 16ஆம் தேதி விசாரணை நடத்தியபோது, முக்கிய விவகாரம் தொடர்பான மனுக்களில் பிழைகள் காணப்படுவதாக அதிருப்தி தெரிவித்தனர். அந்தப் பிழைகளைத் திருத்தி, புதிய மனுக்களை தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர். இதைத் தொடர்ந்து, அந்த மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com