370-ஆவது பிரிவு தேச நலனுக்கு எதிரானது என்பது காங்கிரஸுக்கு தெரியும்: பாஜக செயல் தலைவர் ஜெ.பி. நட்டா

தேச நலனுக்கு 370-ஆவது சட்டப் பிரிவு எதிரானது என்பது காங்கிரஸுக்குத் தெரியும்; இருப்பினும் அந்த சட்டப் பிரிவை வைத்து காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலில் எப்போதும் ஈடுபட்டு வந்துள்ளது என்று பாஜக செயல்
370-ஆவது பிரிவு தேச நலனுக்கு எதிரானது என்பது காங்கிரஸுக்கு தெரியும்: பாஜக செயல் தலைவர் ஜெ.பி. நட்டா


தேச நலனுக்கு 370-ஆவது சட்டப் பிரிவு எதிரானது என்பது காங்கிரஸுக்குத் தெரியும்; இருப்பினும் அந்த சட்டப் பிரிவை வைத்து காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலில் எப்போதும் ஈடுபட்டு வந்துள்ளது என்று பாஜக செயல் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் இதுகுறித்து அவர் பேசியதாவது: ஒரு தேசம், ஒரு சட்டம், ஒரு சின்னம் என்பதை மோடி ஊர்ஜிதமாக்கியுள்ளார். அதற்கு காங்கிரஸ் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது? 370-ஆவது பிரிவு தற்காலிகமானதுதான் என காங்கிரஸ் தெரிவித்தது. அந்தப் பிரிவால் நன்மை என்றால், அக்கட்சி ஏன் அதை நிரந்தரமாக்கவில்லை?

காங்கிரஸிடம் ஒரு காலத்தில் 400-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இருந்தனர். அப்போது அந்தப் பிரிவை ஏன் நிரந்தரமாக்கவில்லை? ஏனெனில், 370-ஆவது பிரிவு தேச நலனுக்கு எதிரானது என்று காங்கிரஸுக்கு தெரியும். இருப்பினும், அதை வைத்து வாக்கு வங்கி அரசியலை காங்கிரஸ் செய்து வந்துள்ளது. நாட்டை விட காங்கிரஸுக்கு வாக்குதான் பெரிது.

நாட்டின் பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தானில் இருந்து ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு வந்தவர்கள், தலைவர்கள் ஆனார்கள். ஆனால் ஜம்மு-காஷ்மீருக்கு சென்ற யாராலும் கவுன்சிலர் கூட ஆக முடியவில்லை.
நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேல், 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றாக இணைத்தார். காஷ்மீரை மட்டும் ஜவாஹர்லால் நேருவுக்காக விட்டு விட்டார். அது தற்போது பிரச்னையாகி விட்டது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், சர்வாதிகாரி போல செயல்படுகிறார். தன்னைக் குறித்தும், தனது குடும்பத்தை குறித்தும்தான் அவர் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை சந்திரசேகர் ராவ் செயல்படுத்தவில்லை என்றார் ஜெ.பி. நட்டா. இதனிடையே, பாஜகவில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக, ஹைதராபாதில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆன்லைன் மூலம் சிலரை கட்சி உறுப்பினர்களாக அவர் இணைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com