5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

நாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் புதிதாக 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூற
5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி


நாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் புதிதாக 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சர்வதேச மாநாடு, தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சரும், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நிறுவனங்கள் துறை அமைச்சருமான நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் 29 சதவீதம் பங்களிப்பு செலுத்துகின்றன. அண்மைக் காலங்களில், இந்தத் துறையில் 11 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். அந்த இலக்கை எட்டுவதற்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் 50 சதவீதம் பங்களிப்பு செலுத்த வேண்டும்.
மேலும், வேலையின்மை என்ற மிகப்பெரிய சவாலை நாம் எதிர்கொண்டுள்ளோம். பிரதமரின் பொருளாதார இலக்கை எட்டுதற்கு இன்னும் 5 ஆண்டுகளில் இந்தத் துறையில் கூடுதலாக 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் அலிபாபா இணைய வர்த்தக நிறுவனம், முக்கியப் பங்காற்றி வருகிறது. அதேபோல், இந்தியாவுக்கென புதிதாக இணையவழி வர்த்தக நிறுவனத்தை உருவாக்குவற்காக, மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இணையவழி சந்தை அமைப்புடன் (அரசு இ-மார்க்கெட்) சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. அந்த வலைதளம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com