நீதிமன்ற கார் ஓட்டுநரின் மகன் சிவில் நீதிபதித் தேர்வில் வெற்றி பெற்று சாதனை

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இருப்பவரின் மகன் சேட்டன் பஜத், சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியாக உயர்ந்துள்ளார்.
நீதிமன்ற கார் ஓட்டுநரின் மகன் சிவில் நீதிபதித் தேர்வில் வெற்றி பெற்று சாதனை


இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இருப்பவரின் மகன் சேட்டன் பஜத், சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியாக உயர்ந்துள்ளார்.

இந்த உயரத்துக்கு வர முக்கியக் காரணமே எனது தந்தை கோவர்தன்லால் பஜத்தான் என்று கூறும் சேட்டன், நீதிமன்றத்தில் அவர் ஓட்டுநராக பணியாற்றுவதன் மூலம் நீதித் துறையின் மீது எனக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது, அந்த ஈர்ப்பு இன்று சாதனையாகியுள்ளது என்கிறார்.

எப்போதுமே நான் நீதிபதியாக வேண்டும் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். தற்போது அந்த எண்ணம் ஈடேறியுள்ளது. நான் எனது பணியை மிகச் சிறப்பாகவும், நேர்மையுடனும் செய்வேன். சமூகத்துக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பேன் என்கிறார் பெருமிதத்துடன்.

ஒரு நாளைக்கு 12 முதல் 13 மணி நேரம் தொடர்ந்து படிப்பேன் என்று கூறியிருக்கும் சேட்டன், காலை 8 மணிக்கு நூலகம் சென்றுவிட்டால் இரவு 9 அல்லது 10 மணிக்குத்தான் வீட்டுக்கு வருவேன். நான் இரவு வீட்டுக்கு வரும் போது எனது குடும்பத்தினர் என்னுடன் சேர்ந்து உணவருந்த காத்திருப்பார்கள் என்று புன்னகையோடு கூறுகிறார்.

எனது மகன் அடைந்த சாதனையை நினைத்து நாங்கள் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம் என்று கூறுகிறார்கள் அவர்களது பெற்றோர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com