வெளிநாட்டு நிறுவனங்களால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படக் கூடாது: நிர்மலா சீதாராமன்

வெளிநாட்டு நிறுவனங்களால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியத்
இந்தியத் தொழில்போட்டிகள் ஆணையத்தின் 10-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்த ஆணையத்தின் தலைவர் அசோக் குமார் குப்தா. 
இந்தியத் தொழில்போட்டிகள் ஆணையத்தின் 10-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்த ஆணையத்தின் தலைவர் அசோக் குமார் குப்தா. 


வெளிநாட்டு நிறுவனங்களால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியத் தொழில்போட்டிகள் ஆணையத்துக்கு (சிசிஐ) மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதிக்கும் வகையிலான நேர்மையற்ற வணிக நடைமுறைகளை இந்தியத் தொழில்போட்டிகள் ஆணையம் கண்காணித்து வருகிறது. டிஜிட்டல் வர்த்தகம் தொடர்பான பல்வேறு வழக்குகளையும் அந்த ஆணையம் விசாரித்து தீர்வு கண்டு வருகிறது. இந்நிலையில், ஆணையத்தின் 10-ஆம் ஆண்டு விழா தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப வர்த்தக நடைமுறைகளும் மேம்பட்டு வருகின்றன. ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட எல்லை மட்டும் நிறுவனங்களுக்கிடையேயான தொழில்போட்டியை நிர்ணயித்துவிடாது. தற்போதைய காலகட்டத்தில் நாடுகளின் எல்லை கடந்து வர்த்தகம் வளர்ந்து வருகிறது.
இதன் காரணமாக, வெளிநாட்டு நிறுவனங்களால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதைக் கருத்தில்கொண்டு, இந்தியத் தொழில்போட்டிகள் ஆணையம் தானாக முன்வந்து, இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை சிசிஐ மேற்கொள்ள வேண்டும்.
இந்த விவகாரத்தில், மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்களையும் சிசிஐ வழங்கலாம் என்றார் நிர்மலா சீதாராமன். இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர், சிசிஐ தலைவர் அசோக் குமார் குப்தா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com