1,200 கி.மீ. தூரம், 90 மணிநேரம் இடைவிடாத சைக்கிள் பயணம்: இந்திய ராணுவ அதிகாரி மகத்தான சாதனை

பிரான்ஸின் மிகப் பழமையான பாரம்பரியமிக்க சைக்கிள் பயணம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. 
1,200 கி.மீ. தூரம், 90 மணிநேரம் இடைவிடாத சைக்கிள் பயணம்: இந்திய ராணுவ அதிகாரி மகத்தான சாதனை

பிரான்ஸின் மிகப் பழமையான பாரம்பரியமிக்க சைக்கிள் பயணம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் பாரீஸில் இருந்து புறப்பட்டு பிரெஸ்ட் சென்றடைந்து, பின்னர் மீண்டும் அங்கிருந்து பாரீஸ் வந்தடைய வேண்டும். இதன் தூரம் 1,200 கிலோ மீட்டர்கள் ஆகும். இம்முறை இதற்கான தொடக்கம் மற்றும் முடிவுக்கான மைய இடமாக ராம்பௌலெட் பகுதி தேர்வு செய்யப்பட்டது.

இதில், இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி கலந்துகொண்டார். 56 வயதான ராணுவ அதிகாரி அனில், இந்த 1,200 கி.மீ. தூரத்தை ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்கி தூக்கமின்றி 90 மணிநேரங்கள் இடைவிடாமல் இந்த சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக முடித்தார். 

இதன்மூலம் பிரான்ஸின் புகழ்பெற்ற இந்த சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக முடித்த முதல் இந்திய ராணுவ அதிகாரி எனும் சாதனையைப் படைத்தார். 

கடந்த 1931-ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த பாரம்பரியமிக்க சைக்கிள் பயணத்தில் இதுவரை 31,125 பேர் வெற்றிகரமாக தங்கள் பயணத்தை நிறைவு செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com