உ.பியில் திருநங்கைகளுக்கான முதல் கழிப்பறை!

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் திருநங்கைகளுக்கான கழிப்பறை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
உ.பியில் திருநங்கைகளுக்கான முதல் கழிப்பறை!

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் திருநங்கைகளுக்கான கழிப்பறை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் மூன்றாம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகளுக்கு மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் தற்போது முக்கியத்துவம் அளித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் அரசுத்துறைகளில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் திருநங்கைகளுக்கான கழிப்பறை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மகளிர் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரசாந்தி சிங் மற்றும் முன்னாள் ஒலிம்பிக் வீரர் ராகுல் சிங் ஆகியோர் இதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

பல்வேறு கட்ட திட்டமிடலுக்கு பின்னர், திருநங்கைகளுக்கு ஒரு கழிப்பறை கட்ட முடிவு செய்துள்ளோம் என்றும், ஆகஸ்ட் 29ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமான அன்று இந்தத்  திட்டத்திற்கான கணக்கெடுப்பு தொடங்கும் என்றும் பிரசாந்தி சிங் தெரிவித்துள்ளார். 

வாரணாசி விளையாட்டு கூட்டமைப்பு இந்தத் திட்டத்தில் முழு ஒத்துழைப்பை வழங்குவதாகக் கூறியுள்ளது. அதிகபட்ச எண்ணிக்கையிலான திருநங்கைகள் கழிப்பறை வசதியை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்படும் என்று ராகுல் சிங் கூறினார். காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி இதற்கான கட்டுமானப் பணியைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். 

திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என  உச்ச நீதிமன்றம் கடந்த 2014 ல் உத்தரவிட்டது. மைசூரு, போபால் மற்றும் நாக்பூரில் திருநங்கைகளுக்கென தனி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com