ஜம்மு-காஷ்மீர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு விரைவில் தேர்தல்: நிர்வாகம் முடிவு 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
 இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் முதன்மைச் செயலர் ரோஹித் கன்சால் கூறுகையில், "ஊராட்சி ஒன்றியங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
 இந்தத் தேர்தல் மூலம் ஊராட்சி ஒன்றியங்களை செயல்பட வைக்க முடியும்' என்றார்.
 ஜம்மு-காஷ்மீர் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஷீதல் நந்தா கூறுகையில், "மாநிலம் முழுவதும் 316 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்' என்றார்.
 ஜம்மு-காஷ்மீரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. பஞ்சாயத்துத் தேர்தல் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்றது.
 ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து படிப்படியாக பதற்ற சூழல் நீங்கி காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com