தமிழகத்தைப் பின்பற்றும் உ.பி மாநில அரசு! எதில் தெரியுமா?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை அமைக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 
தமிழகத்தைப் பின்பற்றும் உ.பி மாநில அரசு! எதில் தெரியுமா?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை அமைக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

பேருந்துகளில் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு எந்தவித சிரமுமின்றி பாலூட்டும் வகையில், தமிழகத்தில் அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சி பேருந்துகளில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டது.

கடந்த 2015ம் ஆண்டு தாய்ப்பால் வாரமான ஆகஸ்ட் முதல் வாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்தத் திட்டத்தினை கொண்டு வந்தார். இது பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக தாய்மார்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இதைத்தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் தாய்மார்களுக்கும் பாலூட்டும் அறை அமைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 

தாய்மார்கள் வெளியூர் பயணிக்கும் போது, பிறந்த குழந்தைகளுக்கு பாலூட்ட இந்த அறை மிகவும் பயன்படும் என்றும், எல்.இ.டி விளக்கு மற்றும் மின்விசிறி உள்ளிட்ட போதுமான வசதிகளுடன் அறை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாய்ப்பால் கொடுக்கும் அறைகளை அமைப்பதற்காக ரூ. 2.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 242 பேருந்து நிலையங்களில் முதற்கட்டமாக 23 பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறை ஏற்படுத்தப்படும். தொடர்ந்து, வருகிற நவம்பர் மாதத்திற்குள் மற்ற பேருந்து நிலையங்களில் அமைக்கப்படும். 

உத்தரப்பிரதேச சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ராஜ் சேகர் மேற்குறிப்பிட்ட தகவல்களை வெளியிட்டுள்ளார். 

முன்னதாக பெங்களுருவில் உள்ள பேருந்து நிலையங்களில் கடந்த 2017ம் ஆண்டு தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com