ஊழல் குற்றச்சாட்டுகள்: மத்திய வரித்துறை அதிகாரிகள் 22 பேருக்கு கட்டாய பணி ஓய்வு 

ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக மத்திய வரித்துறை அதிகாரிகள் 22 பேருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள்: மத்திய வரித்துறை அதிகாரிகள் 22 பேருக்கு கட்டாய பணி ஓய்வு 

புது தில்லி: ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக மத்திய வரித்துறை அதிகாரிகள் 22 பேருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் மோடி அரசு இரண்டாவது முறையாக பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு துறைகளில் ஊழலில் ஈடுபடும் அரசுத்துறை அதிகாரிகளை குறிவைத்து நடவ்டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மத்திய வரித்துறையில் பணியாற்றும் 22 அதிகாரிகள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளும், தவறான நடத்தை குற்றச்சாட்டுகளும் இருந்ததையடுத்து, அவர்களை கட்டாய ஓய்வில் மத்திய அரசு அனுப்பியுள்ளது.

மத்திய மறைமுக மற்றும் கலால்வரிக்கான வாரியத்தின் கீழ் வரும் ஜிஎஸ்டி, மற்றும் இறக்குமதி வரிவசூல் பிரிவில் இருக்கும் 22 கண்காணிப்பாளர் அந்தஸ்து அதிகாரிகள் மீது, ஊழல் மற்றும் இதர குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, பொதுமக்களின்நலன் அடிப்படையில், பணியாளர் சட்டங்கள்  56(ஜே) பிரிவின் கீழ் அவர்கள் அனைவருக்கும் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது

நாக்பூர், போபால் மண்டலைச் சேர்ந்த 11 அதிகாரிகளும் இந்த 22 கட்டாய ஓய்வு அதிகாரிகள் பட்டியலில் அடங்குவார்கள். இதேபோல தில்லி, சென்னை, கொல்கத்தா, மீரட், சண்டிகார் மண்டலத்தில் இருந்து தலா ஒரு அதிகாரியும், மும்பை, ஜெய்பூர், பெங்களூரு மண்டலத்தில் இருந்து ஒரு அதிகாரியும் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த ஜூன் மாதம் இதேபோன்று ஆணையர்  அந்தஸ்தில் இருக்கும் 15 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த அதிகாரிகள் மீது ஊழல், வரிவசூலின்போது லஞ்சம் பெறுவது, கடத்தல், கிரிமினல் குற்றச்சாட்டு போன்றவை இருந்தன என்பதுகுறிப்பிடத்தக்கது.

பின்னர் 12 ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த அதிகாரிகள் மீது ஊழல், பாலியல் குற்றச்சாட்டு, வருமானத்துக்கு அதிகமான சொத்து ஆகிய குற்றச்சாட்டுகள் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com