முதுகெலும்புக்குள் கட்டி: ஓமன் பெண்ணைக் காப்பாற்றிய பெங்களூரு மருத்துவர்

முஸ்னா மொஹம்மது (22) என்ற ஓமனைச் சேர்ந்த பெண்ணுக்கு, முதுகெலும்புக்குள் கட்டி இருப்பது தெரிய வந்தபோது வாழ்க்கையே நரகமாகிப் போனது.
முதுகெலும்புக்குள் கட்டி: ஓமன் பெண்ணைக் காப்பாற்றிய பெங்களூரு மருத்துவர்


பெங்களூரு: முஸ்னா மொஹம்மது (22) என்ற ஓமனைச் சேர்ந்த பெண்ணுக்கு, முதுகெலும்புக்குள் கட்டி இருப்பது தெரிய வந்தபோது வாழ்க்கையே நரகமாகிப் போனது.

முதுகெலும்புக்குள் இருக்கும் கட்டியை அகற்றுவது என்பது மிகவும் சிக்கலானது என்று ஓமனில் மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். சில சமயம் உடல் செயலிழக்கம் அல்லது கோமா நிலைக்கு செல்வது அல்லது மரணமே நிகழலாம் என்று தெரிவித்திருந்தனர்.

ஆனால் நல்ல வேளையாக, இந்தியா வந்து அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் முஸ்னா அந்த புன்னகை மாறாமல் இருக்கிறார்.

பெங்களூருவில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் முரளி மோகன் இதுபோன்ற பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். 

நான் இந்தியா வந்து டாக்டர் மோகனை பார்த்த போது, அறுவை சிகிச்சையை சிறப்பாக செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து, எனது வாழ்க்கையில் அந்த ரிஸ்க்கை எடுக்கலாம் என்று முடிவெடுத்தேன் என்கிறார் முஸ்னா.

முதுகெலும்புக்குள் கட்டி வருவது மிகவும் அதிசயம். இதற்காக முஸ்னாவின் முதுகெலும்பை 7 மி.மீ. அளவுக்கு திறந்து அதனுள் இருந்த கட்டி அகற்றப்பட்டது என்கிறார் மருத்துவர் மோகன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com