ரிசர்வ் வங்கிப் பணத்தை மோடியும், நிர்மலா சீதாராமனும் கொள்ளையடித்து விட்டனர்: ராகுல்

ரிசர்வ் வங்கிப் பணத்தை மோடியும், நிர்மலா சீதாராமனும் கொள்ளையடித்து விட்டதாக ராகுல் குற்றம்சாட்டினார்.
ரிசர்வ் வங்கிப் பணத்தை மோடியும், நிர்மலா சீதாராமனும் கொள்ளையடித்து விட்டனர்: ராகுல்

ரிசர்வ் வங்கிப் பணத்தை பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கொள்ளையடித்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், செவ்வாய்கிழமை குற்றம்சாட்டினார்.

நாட்டின் பொருளாதாரச் சூழல்களை கருத்தில் கொண்டு மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பாக ராகுல் தனது ட்விட்டரில் பதிவிட்டதாவது,

தானாக முன்வந்து ஏற்படுத்திய இந்த பொருளாதாரச் சீரழிவை சீர்செய்ய வழியின்றி பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ரிசர்வ் வங்கியின் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். 

இது துப்பாக்கி குண்டு பாய்ந்து ஏற்பட்ட காயத்துக்கு அருகில் உள்ள மருந்தகத்தில் இருந்து பேண்ட்டேஜ்-ஐ திருடுவதைப் போன்றது என விமர்சித்துள்ளார். மேலும் ஆர்பிஐ பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்ற ஹேஷ்டேக்-ஐயும் பயன்படுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com