உ.பி முதல்வர் யோகியின் திடீர் விசிட்டால் மருத்துவமனையில் ஏற்பட்ட சர்ச்சை!

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட வந்ததையடுத்து, ரேபரேலியில் உள்ள மருத்துவமனையில் நோயாளிகளுக்கு காவி நிற படுக்கை விரிப்பு வழங்கப்பட்டுள்ளது. 
உ.பி முதல்வர் யோகியின் திடீர் விசிட்டால் மருத்துவமனையில் ஏற்பட்ட சர்ச்சை!

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட வந்ததையடுத்து, ரேபரேலியில் உள்ள மருத்துவமனையில் நோயாளிகளுக்கு காவி நிற படுக்கை விரிப்பு வழங்கப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திடீரென ரேபரேலியில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் வருவதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு காவி நிற கோடுகளுடன் கூடிய படுக்கை விரிப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் என்.கே.ஸ்ரீவஸ்தா பேசுகையில், 'படுக்கை விரிப்புகளுக்கு நிரந்தரமான நிறம் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு நாளுமே வழங்கப்படும் படுக்கை விரிப்புகளின் நிறம் வெவ்வேறாகவே இருக்கும். எனவே, இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை' என்று தெரிவித்தார். 

ஆனால், அதே நேரத்தில், மருத்துவமனையில் காவி நிற படுக்கை விரிப்புகள் இதுவரை வழங்கப்பட்டதில்லை என்றும் முதல்முறையாக இந்த நிறத்தில் படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதல்வரின் திடீர் ஆய்வையடுத்து அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. காவி நிற படுக்கை விரிப்பு வழங்கப்பட்டது மருத்துவமனை வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மருத்துவமனை ஆய்வுக்குப் பின்னர் முதல்வர் யோகி ஆதித்யநாத், ரேபரேலியில் விடுதலை போராட்ட வீரப்பெண்மணி ராணா பெனி மாதோ சிங்கின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். மேலும், அங்கு நடைபெற்ற மற்றொரு விழாவிலும் அவர் கலந்துகொள்ள இருக்கிறார். 

முதல்வர் யோகி வந்த அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ அகிலேஷ் சிங்கின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்க, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ராவும் ரேபரேலிக்கு வந்தார். அகிலேஷ் சிங் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 20ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அகிலேஷ் சிங்கின் மகள் அதிதி சிங் தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com