நாட்டில் 2,000 ரூபாய் நோட்டின் புழக்கம் குறைந்தது: பிரிண்ட் செய்வதை நிறுத்தியதா ஆர்பிஐ?

இந்தியாவில் 2018 - 19ம் நிதியாண்டில் 2,000 ரூபாய் நோட்டின் புழக்கம் குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நாட்டில் 2,000 ரூபாய் நோட்டின் புழக்கம் குறைந்தது: பிரிண்ட் செய்வதை நிறுத்தியதா ஆர்பிஐ?


இந்தியாவில் 2018 - 19ம் நிதியாண்டில் 2,000 ரூபாய் நோட்டின் புழக்கம் குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2018- 19ம் நிதியாண்டில் இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டின் புழக்கம் வெறும் 31% ஆக மட்டுமே இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது 15 கோடியே 10 லட்சமாக இருந்த 2000 ரூபாய் நோட்டின் புழக்கம் 2018-19ம் நிதியாண்டில் வெறும் 47 லட்சம் நோட்டுகளாகக் குறைந்துள்ளது. 

அதாவது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 2018-ம் ஆண்டு 15 கோடியே 10 லட்சம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட நிலையில் தற்போது முடிந்த நிதியாண்டில் 4 கோடியே 70 லட்சம் நோட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன.

ஜனவரி மாதம் முதல் 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் மெதுவாகக் குறைந்து வருவதால், புதிதாக 2000 நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திவைத்துள்ளது.

2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்ட பிறகு, இந்திய ரிசர்வ் வங்கியால் 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது மட்டும் சுமார் 3.504 பில்லியன் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. அதாவது 2016-17ல்.

இது தற்போது மிகவும் குறைந்துள்ள நிலையில், 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 18.3% அளவுக்கு அதிகரித்துள்ளது. 

அதாவது கடந்த ஆண்டில் 950 கோடி அளவுக்கு 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட நிலையில் தற்போது அதுவே 1100 கோடி அளவுக்கு அச்சடிக்கப்பட்டு வருகிறது.

பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட போது ரூ.1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெரிய அளவில் புழக்கத்தில் விட்டன. தற்போது ரூ.500, ரூ.200 மற்றும் இதர ரூபாய் நோட்டுகளும் கணிசமான அளவுக்கு பணப்புழக்கத்துக்கு வந்துவிட்டதால் 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்துவிட்டதைப் போல உணரப்படலாம் என்று கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com