குப்வாராவில் செல்லிடப்பேசி சேவை மீண்டும் தொடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக செல்லிடப்பேசி சேவைகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், குப்வாரா மாவட்டத்தின் சில பகுதிகளில்


ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக செல்லிடப்பேசி சேவைகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், குப்வாரா மாவட்டத்தின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை செல்லிடப்பேசி சேவை மீண்டும் தொடங்கியது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து மத்திய அரசு இந்த மாதத் தொடக்கத்தில் நடவடிக்கை மேற்கொண்டது. அதனால் அங்கு பிரச்னைகள் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணையச் சேவைகள், செல்லிடப்பேசிகள், தொலைபேசிகள் என அனைத்து சேவைகளும் கடந்த 5-ஆம் தேதி துண்டிக்கப்பட்டன. 
இந்நிலையில், காஷ்மீரில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. சில நாள்களுக்கு முன், பல பகுதிகளில் தொலைபேசி சேவைகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. செல்லிடப்பேசி மற்றும் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தன. 
அதையடுத்து, காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் செல்லிடப்பேசி சேவை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பிஎஸ்என்எல், ஜியோ, வோடஃபோன் ஆகிய நிறுவனங்களின் போஸ்ட்-பெய்டு சேவையை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு செல்லிடப்பேசி சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, அழைப்பு மேற்கொள்ளும் வசதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ப்ரீ-பெய்டு சேவையைப் பயன்படுத்துபவர்களின் செல்லிடப்பேசி சேவை துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com