ஆங்கிலம் வாசிக்கத் தெரியாத ஆசிரியைகள் சஸ்பெண்ட்! - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

உத்தரப்பிரதேசத்தில் பள்ளி ஆய்வின் போது, ஆங்கிலம் வாசிக்கத் தெரியாத ஆசிரியர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 
ஆங்கிலம் வாசிக்கத் தெரியாத ஆசிரியைகள் சஸ்பெண்ட்! - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

உத்தரப்பிரதேசத்தில் பள்ளி ஆய்வின்போது, ஆங்கிலம் வாசிக்கத் தெரியாத ஆசிரியைகள் இருவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் மாவட்டத்தின் சிகந்தர்பூர் சரௌஸி அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார் பாண்டே, யாரும் எதிர்பார்க்காத நிலையில், திடீரென கடந்த 28-ஆம் தேதி ஆய்வு நடத்தினர். அப்போது, அங்கிருந்த ஆங்கில ஆசிரியையிடம் 8-ஆம் வகுப்புக்கு ஆங்கிலப் புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். ஆனால், சில வரிகளைக் கூட வாசிக்க இயலாமல் அந்த ஆசிரியை திணறினார்.

இதைப்பார்த்து மாவட்ட ஆட்சியர், ஆங்கில ஆசிரியருக்கு ஆங்கிலம் கூட வாசிக்கக் கூடத் தெரியவில்லை. இவரையெல்லாம் உடனடியாக பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும், குற்றச்சாட்டை மறுத்த ஆசிரியையைப் பார்த்து, 'நான் உங்களை அதற்கான விளக்கத்தை கூறுமாறோ, மொழியாக்கம் செய்யுமாறோ கூறவில்லை. அந்த வரிகளை வாசித்தால் போதும் என்று தான் கூறினேன். ஆனால், அதுகூட உங்களால் முடியவில்லை' என்று கோபமாகக் கூறினார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது. 

இந்நிலையில், மூத்த ஆசிரியர் சுஷிலா மற்றும் உதவி ஆசிரியர் ராஜ்குமாரி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பாண்டே உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர்களிடம் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட ஆசிரியைகள் இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com