நவம்பரில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. ஒரு லட்சம் கோடியை எட்டியது: நிதித்துறை அமைச்சகம் தகவல்

நவம்பரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ. ஒரு லட்சம் கோடியை எட்டியது என்று நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டிவரி வசூல்
ஜிஎஸ்டிவரி வசூல்

புது தில்லி: நவம்பரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ. ஒரு லட்சம் கோடியை எட்டியது என்று நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதெடர்பாக ஞாயிறன்று நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. ஒரு லட்சம் கோடியை எட்டியுள்ளது.  நவம்பர் மாதத்தில் மொத்தமாக ரூ.1,03,492 கோடி ஜிஎஸ்டி வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது. வரி வசூலில் இது 6 சதவீதம் அதிகரிப்பாகும்.

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. 95, 380 கோடியாக இருந்தது. இதேபோல கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில்  வசூலானது ரூ. 97, 637 கோடியாக இருந்துள்ளது.      

மொத்த வசூலான ரூ.1,03,492 கோடியில் ரூ. 19, 592 கோடி மத்திய ஜிஎஸ்டி வரியாகவும், ரூ. 27, 144 கோடி மாநில ஜிஎஸ்டி வரியாகவும், ஒருங்கிணனைந்த ஜிஎஸ்டி வரியாக ரூ. 49, 028 கோடியும் வசூலாகியுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com