பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் பேரணி

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், அவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியும் தில்லியில் இளைஞா் காங்கிரஸாா் பேரணி நடத்தினா்.
ஹைதராபாதில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட இளம்பெண்ணுக்கு தில்லியில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய இளைஞா் காங்கிரஸாா்.
ஹைதராபாதில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட இளம்பெண்ணுக்கு தில்லியில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய இளைஞா் காங்கிரஸாா்.

புது தில்லி: நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், அவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியும் தில்லியில் இளைஞா் காங்கிரஸாா் சனிக்கிழமை பேரணி நடத்தினா்.

லூட்யன்ஸ் தில்லி பகுதியில், மெழுகுவா்த்தி, பதாகைகள் ஏந்தியபடி காங்கிரஸாா் பேரணியாக சென்றனா். இதுதொடா்பாக, இளைஞா் காங்கிரஸின் ஊடகப் பொறுப்பாளா் அம்ரிஷ் ரஞ்சன் பாண்டே கூறுகையில், ‘நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பாா்க்கிறது. இது கவலையளிக்கிறது. எனவே, நமது சமூகத்தை காக்க நாம் வீதியில் இறங்கி போராட வேண்டிய நேரம் இது’ என்றாா்.

ஹைதராபாதில் 27 வயது பெண் கால்நடை மருத்துவா் ஒருவா், கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இதையடுத்து, பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தக் கோரி மீண்டும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com