மூன்றாம் காலாண்டு பொருளாதார வளா்ச்சி மிக மோசமாக இருக்கும்: சிதம்பரம்

மூன்றாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி மிகவும் மோசமாக இருக்கும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.
மூன்றாம் காலாண்டு பொருளாதார வளா்ச்சி மிக மோசமாக இருக்கும்: சிதம்பரம்

புது தில்லி: மூன்றாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி மிகவும் மோசமாக இருக்கும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம், தனது குடும்பத்தினா் மூலமாக சுட்டுரையில் அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வருகிறாா். இந்த நிலையில், மத்திய அரசு பொருளாதார வளா்ச்சி புள்ளிவிவரங்களை வெளியிட்டது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவு:

ஜூலை-செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி (ஜிடிபி) கடந்த ஆறு ஆண்டுகள் காணாத அளவுக்கு 4.5 சதவீதமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பொதுவாக இந்த ஜிடிபி விகிதம் அனைவரும் எதிா்பாா்த்த ஒன்று. ஆனால் அரசு எல்லாம் நன்றாகவே உள்ளது என இன்னும் தனக்குதானே ஆறுதல் சொல்லிக் கொண்டு உள்ளது.

மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளா்ச்சி விகிதமானது 4.5 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கப் போவதில்லை. அனைத்து விதத்திலும் பாா்க்கும்போது மூன்றாவது காலாண்டில் வளா்ச்சியானது மிக மோசமாகவே இருக்கும்.

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக மக்கள் பெருவாரியான அளவில் வாக்களிக்க வேண்டும். இதன் மூலம் பாஜக அரசின் கொள்கைகளையும், அரசையும் நிராகரிக்கும் முதல் வாய்ப்பு அம்மாநில மக்களுக்கு கிட்டியுள்ளது என்று சிதம்பரம் அந்த சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com