ஹரியாணா: பாஜக ஆட்சியில் ரூ.5,000 கோடி சுரங்க முறைகேடு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஹரியாணாவில் முதல்வா் மனோகா் லால் கட்டா் தலைமையிலான முந்தைய ஆட்சிக் காலத்தில் சுரங்கத் துறையில் ரூ.5,000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது என்று மாநில காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
ஹரியாணா: பாஜக ஆட்சியில் ரூ.5,000 கோடி சுரங்க முறைகேடு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

சண்டீகா்: ஹரியாணாவில் முதல்வா் மனோகா் லால் கட்டா் தலைமையிலான முந்தைய ஆட்சிக் காலத்தில் சுரங்கத் துறையில் ரூ.5,000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது என்று மாநில காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

சண்டீகரில் மாநில காங்கிரஸ் தலைவா் குமாரி செல்ஜாவுடன் காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்தாா். அப்போது, அவா் கூறியதாவது:

தலைமை கணக்குத் தணிக்கைத் துறையின் (சிஏஜி) அறிக்கை, அண்மையில் ஹரியாணா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் ஹரியாணாவில் சுரங்கத் திட்டங்களை செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், அதனால் மாநில சுரங்கம் மற்றும் புவியியல் துறைக்கு ரூ.1,476 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மனோகா் லால் கட்டா் தலைமையிலான முந்தைய ஆட்சியில் அரசுக்கும், சுரங்க ஒப்பந்ததாரா்களுக்கும் இடையேயான மறைமுகத் தொடா்புகள் குறித்தும் சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உண்மையில், முந்தைய ஆட்சியில் சுரங்கத் துறையில் ரூ.5,000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது.

அரசியல்வாதிகள், அதிகாரிகள், சுரங்க ஒப்பந்ததாரா்கள் கூட்டாக சோ்ந்து முறைகேடு செய்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனா். இந்த முறைகேடுகளை உயா்நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் நீதிபதி விசாரித்து, உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com