நித்யானந்தா குஜராத் ஆசிரமத்தை அதிரடியாக மூடி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

குஜராத் மாநிலம் ஹீராபூரில் உள்ள நித்யானந்தா நடத்தும் ஆசிரமத்தை, மாவட்ட நிர்வாகம் அதிரடியாக மூடி திங்கள்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளது. 
நித்யானந்தா குஜராத் ஆசிரமத்தை அதிரடியாக மூடி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

குஜராத்தில் நித்யானந்தா நடத்தும் ஆசிரமத்தில் உள்ள தனது இரண்டு மகள்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் விரைவில் புகார் அளிக்க உள்ளதாக பெங்களூருவைச் சேரந்த ஜனார்த்தன ஷர்மா தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

லோபமுத்ரா (21) மற்றும் நந்திதா (18) ஆகிய எனது இரு மகள்களையும் மீட்க முடியவில்லை. அவர்கள் வலுக்கட்டாயமாக அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். எனது மகள்கள் உள்பட பல்வேறு பெண்கள் வெளிநாட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்த வேண்டும். மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் புகார் அளிக்கவுள்ளேன் என்றார். 

இதனிடையே குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நித்யானந்தா ஆசிரமத்தில் குஜராத் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை தீவிர சோதனை நடத்தினர். ஆசிரமத்தின் மேலாளர்கள் உட்பட அங்கிருந்தவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு நித்யானந்தா இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர் புகார் காரணமாக குஜராத் மாநிலம் ஹீராபூரில் உள்ள நித்யானந்தா நடத்தும் ஆசிரமத்தை, மாவட்ட நிர்வாகம் அதிரடியாக மூடி திங்கள்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து ஆசிரமதத்தில் இருந்த அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

தனியார் பள்ளியில் நித்யானந்தா ஆசிரமம் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com