வெங்காய விலை உயர்வு குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும்: கம்யூனிஸ்ட் எம்.பி வலியுறுத்தல்

வெங்காயம் மற்றும் பருப்பு வகைகள் அதிகரித்து வருவது குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான பினாய் விஸ்வம் தெரிவித்தார்.
வெங்காய விலை உயர்வு குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும்: கம்யூனிஸ்ட் எம்.பி வலியுறுத்தல்

சமீபத்திய காலங்களில் வெங்காயம் மற்றும் பருப்பு வகைகள் அதிகரித்து வருவது குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான பினாய் விஸ்வம் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா முழுவதுமே வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப்  பொருட்களின்  விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலையை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.  

இந்நிலையில், வெங்காயம் மற்றும் பருப்புகளின் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று ராஜ்யசபா எம்.பி பினாய் விஸ்வம் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'வெங்காயம், பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையில் அதிவேக உயர்வு ஏற்பட்டுள்ளது என்பது ஒட்டுமொத்த தேசத்துக்கும் மிகுந்த கவலையை அளிக்கிறது. இந்த நிலைமையே நீடித்தால் பொதுவான குடிமகனுக்கு உயிர்வாழ்வது கடினம். பொருளாதார நெருக்கடியின் உண்மையான விளைவை மக்கள் உணர்கின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெங்காய திருட்டு சம்பவங்கள் மற்றும் விலை உயர்வுக்கு எதிராக போராட்டங்களும் நடைபெறுகின்றன' என்று கூறியுள்ளார். 

மேலும், 'மக்களின் போராட்டங்களுக்கு காட்டப்படும் அரசியல் அக்கறையின்மை வெட்கக்கேடானது. வளர்ந்து வரும் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள அரசு தயாராக வேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் உள்ளது. எனவே இதுகுறித்து கண்டிப்பாக மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும்' என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com