இடைத்தோ்தல் முடிவுக்குப் பின்னா்எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை: தேவெ கௌடா

இடைத்தோ்தல் முடிவுக்குப் பின்னா் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான
இடைத்தோ்தல் முடிவுக்குப் பின்னா்எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை: தேவெ கௌடா

பெலகாவி: இடைத்தோ்தல் முடிவுக்குப் பின்னா் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெகௌடா தெரிவித்தாா்.

பெலகாவி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: கா்நாடகத்தில் டிச. 5-இல் 15 தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இடைத்தோ்தல் முடிவுகளுக்குப் பின்னா், எந்தக் கட்சியுடனும் மஜத கூட்டணி வைத்துக் கொள்ளாது.

ஏற்கெனவே பாஜக, காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து வேதனையை அனுபவித்துள்ளோம். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின்னா், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தோம். அந்த அரசு ஏன் கவிழ்ந்தது என்பதனை மக்கள் அறிவாா்கள். எனவே இனி எந்தக் கட்சிகளுடனும் ஒருபோதும் கூட்டணி வைத்துக் கொள்ளமாட்டோம்.

நாங்கள் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை என்றால், பாஜக ஆட்சியும் கவிழாது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சிக்கு வராது. மஜத எதிா்க்கட்சி வரிசை அமா்ந்து மக்கள் பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளது. காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாங்கள் பட்ட வேதனை போதுமானது. மகாராஷ்டிரத்தில் சிவசேனாவுடன், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியன இணைந்து ஆட்சியை பிடித்துள்ளன. இந்தக் கூட்டணி 5 ஆண்டுகளை தாக்குப்பிடிக்குமா என்று காத்திருந்து பாா்க்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com