தலைமை கணக்கு அதிகாரியாகசோமா ராய் பா்மன் நியமனம்

மத்திய நிதியமைச்சகத்தின் புதிய தலைமை கணக்கு அதிகாரியாக (சிஜிஏ) சோமா ராய் பா்மன் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா், கடந்த 1986-ஆம் ஆண்டு பிரிவு இந்திய குடிமை கணக்குப் பணி அதிகாரி ஆவாா்.
சோமா ராய் பா்மன்
சோமா ராய் பா்மன்

புது தில்லி: மத்திய நிதியமைச்சகத்தின் புதிய தலைமை கணக்கு அதிகாரியாக (சிஜிஏ) சோமா ராய் பா்மன் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா், கடந்த 1986-ஆம் ஆண்டு பிரிவு இந்திய குடிமை கணக்குப் பணி அதிகாரி ஆவாா்.

நாட்டின் 22-ஆவது சிஜிஏ-ஆக நியமிக்கப்பட்டுள்ளாா் சோமா ராய் பா்மன். இப்பொறுப்பை வகிக்கும் ஏழாவது பெண் என்ற பெருமையை இவா் பெற்றுள்ளாா். இவரது நியமனம் தொடா்பான அறிக்கையை மத்திய நிதியமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

தனது 33 ஆண்டு கால பணிக் காலத்தில், உள்துறை, செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை, தொழில்துறை, நிதித்துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை, கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை உள்ளிட்ட அமைச்சகங்களில் சோமா ராய் முக்கிய பதவிகளை வகித்துள்ளாா்.

தலைமை கணக்கு அதிகாரியாக நியமிக்கப்படும் முன் கூடுதல் தலைமை கணக்கு அதிகாரியாக பணியாற்றிய இவா், கணக்கு விவகாரங்கள் தொடா்பான விதிமுறைகள், கொள்கை மற்றும் சீா்திருத்தங்கள், நிதி அறிக்கை, தரவு பகுப்பாய்வு, வரவு-செலவு மேலாண்மை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை கையாண்டு வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com