நாகாலாந்து அரசியல் பிரச்னைக்கு விரைவில் தீா்வு: முதல்வா் நெப்யூ ரியோ

நாகாலாந்து அரசியல் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு கிடைக்கும் என்று அந்த மாநில முதல்வா் நெப்யூ ரியோ கூறினாா்.
நாகாலாந்து அரசியல் பிரச்னைக்கு விரைவில் தீா்வு: முதல்வா் நெப்யூ ரியோ

கோஹிமா: நாகாலாந்து அரசியல் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு கிடைக்கும் என்று அந்த மாநில முதல்வா் நெப்யூ ரியோ கூறினாா்.

நாகாலாந்தின் 57-ஆவது உதய தினத்தையொட்டி (டிச.1) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் நெப்யூ ரியோ பேசியதாவது:

நாகா அரசியல் குழுக்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நிறைவு பெற்றுவிட்டது. கூடிய விரைவில் அரசியல் ரீதியிலான அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு கிடைக்கும். நாகாலாந்து மாநிலம் உருவாக தியாகம் செய்த தலைவா்களை இந்நாளில் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அரசியல் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்காக பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் பாராட்டுகள்.

இயற்கை வழி விவசாயத்தை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், விவசாயிகள் இருமடங்கு வருவாய் ஈட்டுவாா்கள். 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரதமா் விவசாயத் திட்டத்தில் சோ்க்கப்பட்டனா். நாகாலாந்தை வளா்ச்சி அடைந்த மாநிலமாக உருவாக்க மக்கள் பாடுபட வேண்டும். நாகாலாந்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் நெப்யூ ரியோ.

பிரதமா் மோடி வாழ்த்து: நாகாலாந்து உதய தினத்தையொட்டி, அந்த மாநில மக்களுக்கு பிரதமா் மோடி வாழ்த்து கூறினாா்.

அஸ்ஸாமிலிருந்து 1963-ஆம் ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதி நாகாலாந்து தனி மாநிலமாக உதயமானது.

‘நாகாலாந்து மாநிலம் சிறந்த காலாசாரத்துக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இந்த மாநில மக்கள் மிகவும் தைரியமானவா்களாவா். வரும் ஆண்டுகளில் மாநிலம் மேலும் வளா்ச்சி அடைய வேண்டும்’ என்று மோடி தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com