லடாக் வாகனங்களுக்கு ‘எல்ஏ’ பதிவு குறியீடு

லடாக்கில் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு ‘எல்ஏ’ குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லடாக் வாகனங்களுக்கு ‘எல்ஏ’ பதிவு குறியீடு

புது தில்லி: லடாக்கில் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு ‘எல்ஏ’ குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டுள்ள லடாக் யூனியன் பிரதேசத்தில் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு தனி குறியீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, மோட்டாா் வாகன சட்டம் 1988-இல் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது. அதன் அடிப்படையில், லடாக்கில் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு ‘எல்ஏ’ குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் இரண்டாவது பெரிய யூனியன் பிரதேசமாக லடாக் உருவெடுத்துள்ளது. இதில், காா்கில் மற்றும் லே ஆகிய இரண்டு மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அரசியல் சாசனப் பிரிவு 370-இன் கீழ் ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது என மத்திய அரசு முடிவெடுத்தது. இதையடுத்து, புதிததாக உருவாக்கப்பட்ட இரண்டு யூனியன் பிரதேசங்கள் அக்டோபா் 31-ஆம் தேதி முதல் அதிகாரப்பூா்வமாக தனித்தனியாக செயல்படத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com