மேட்டுப்பாளையம் சம்பவத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணை தேவை: மத்திய அமைச்சரிடம் மதுரை எம்.பி மனு

மேட்டுப்பாளையம் சம்பவத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் விசாரணை தேவை என்று கோரி  மத்திய அமைச்சர் தவார் சந்த் கெஹ்லாட்டிடம், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை மனுவினை அளித்துள்ளார்.
மதுரை எம்.பி சு.வெங்கடேசன்
மதுரை எம்.பி சு.வெங்கடேசன்

புது தில்லி: மேட்டுப்பாளையம் சம்பவத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் விசாரணை தேவை என்று கோரி  மத்திய அமைச்சர் தவார் சந்த் கெஹ்லாட்டிடம், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை மனுவினை அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக, சிக்கதாசம்பாளையம் நடூர் கிராமத்தில் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் திங்களன்று சுற்றுச்சுவர் இடிந்தது. இந்த சுற்றுச்சுவர் அருகிலுள்ள அரசு தொகுப்பு வீடுகளின் மேல் விழுந்ததில், அங்கு வாசித்த 10 பெண்கள், 3 ஆண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

இறந்த அனைவரும் அருந்ததியர் இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் குறிப்பிட்ட சுற்றுச்சுவர் தீணடாமை பாகுபாடு காரணமாக கட்டப்பட்ட சுவர் என்றும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. 

இந்நிலையில் மேட்டுப்பாளையம் சம்பவத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் விசாரணை தேவை என்று கோரி  மத்திய அமைச்சர் தவார் சந்த் கெஹ்லாட்டிடம், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை மனுவினை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம்  அருகில் உள்ள நடூர் கிராமத்தில் "தீண்டாமை சுவர்" இடிந்து விழுந்ததில் 17 தலித் மக்கள் உயிரிழந்துள்ளனர். இத்துயர சம்பவத்திற்கு நீதி கேட்டு நாகை திருவள்ளுவன் உள்பட செயற்பாட்டாளர்களும் மற்றும் உற்வினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல் துறை போராட்டக்காரர்களை கொடூரமாக தாக்கி கைது செய்துள்ளது, ஆனால் தீண்டாமை சுவரை கட்டியவரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காவல் துறையின் கொடூரமான தாக்குதல் குறித்தும், 17 தலித் மக்கள் உயிரிழந்துள்ளது குறித்தும் எஸ்.சி ஆணையத்தின் சேர்மன் அவர்களை பாதிக்கப்பட்ட நடூர் கிராமத்திற்கு சென்று உடனடியாக ஆய்வு செய்ய  வலியுறுத்தி மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தவார் சந்த் கெஹ்லாட் அவர்களிடம் கோரிக்கை மனுவினை வழங்கினேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com