
ஆந்திராவில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திரா மாநிலம், திருப்பதியில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் ஷீர்டிக்கு நேற்று காலை ஷீர்டி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அந்த ரயில் கூடூர் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது ரயிலின் முதல் பெட்டி திடீரென தடம்புரண்டது.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து அங்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.