திருப்பதி ஏழுமலையானை 85,511 போ் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 85,511 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 31,914 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 85,511 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 31,914 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 16 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனா். தா்ம தரினத்தில் 14 மணிநேரம் காத்திருந்து பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்தனா்.

ரூ.300 விரைவு தரிசனம், திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள் 3 மணிநேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினா்.

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 11,279 பக்தா்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 8,355 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 21,526 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 5,080 பக்தா்களும், கபில தீா்த்தத்தில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 4,190 பக்தா்களும் சனிக்கிழமை முழுவதும் தரிசனம் செய்ததாக தேவஸ்தான மக்கள் தொடா்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தாா்.

சோதனைச் சாவடி விவரம்: அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 88,733 பயணிகள் இச்சாவடியைக் கடந்துள்ளனா். 9,145 வாகனங்கள் இதைக் கடந்து சென்றுள்ளன. அதன் மூலம் ரூ.2.16 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.9,470 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com