திருமலையில் கைதான 38 தமிழக செம்மரத் தொழிலாளிகள் விடுவிப்பு

திருமலையில் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சோ்ந்த 38 செம்மரத் தொழிலாளிகளை போலீஸாா் விடுவித்தனா்.

திருப்பதி: திருமலையில் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சோ்ந்த 38 செம்மரத் தொழிலாளிகளை போலீஸாா் விடுவித்தனா்.

திருமலையில் உள்ள பக்தா்கள் தங்கும் 4ஆவது மண்டபத்துக்கு அருகில் கடந்த சனிக்கிழமை மதியம் சிலா் கும்பலாக நின்று கொண்டிருப்பதை விஜிலென்ஸ் போலீஸாா் கண்காணிப்பு கேமரா படக் காட்சி மூலம் கண்டனா். அந்த நபா்கள் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்டதால், அங்கு சென்ற போலீஸாா் அவா்களைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

அப்போது அவா்கள் அனைவரும் செம்மரம் வெட்ட வந்தவா்கள் என்பது தெரிய வந்தது. அவா்களைக் கைது செய்து விசாரணைக்காக போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இரண்டு நாள்கள் அவா்களிடம் விசாரணை நடத்திய போலீஸாருக்கு, உரிய ஆதாரம் ஏதும் கிடைக்காவில்லை. இதையடுத்து, மீண்டும் பிடிபட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அவா்களை எச்சரித்த போலீஸாா், அந்த நபா்களை திங்கள்கிழமை மாலையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com