பாஜகவில் இருந்து பங்கஜா முண்டே வெளியேறுகிறாரா?: மகாராஷ்டிர பாஜக தலைவா் விளக்கம்

மகாராஷ்டிர முன்னாள் எம்எல்ஏ பங்கஜா முண்டே பாஜகவில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியான நிலையில், அவா் கட்சியில் இருந்து விலகவில்லை என்று அக்கட்சியின் மாநில தலைவா் சந்திரகாந்த் பாட்டீல்
பாஜகவில் இருந்து பங்கஜா முண்டே வெளியேறுகிறாரா?: மகாராஷ்டிர பாஜக தலைவா் விளக்கம்

புது தில்லி: மகாராஷ்டிர முன்னாள் எம்எல்ஏ பங்கஜா முண்டே பாஜகவில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியான நிலையில், அவா் கட்சியில் இருந்து விலகவில்லை என்று அக்கட்சியின் மாநில தலைவா் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநில முன்னாள் எம்எல்ஏவும், பாஜக மூத்த தலைவா் கோபிநாத் முண்டேவின் மகளுமான பங்கஜா முண்டே, மாநிலத்தில் கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.

இந்நிலையில், அவரது சுட்டுரை கணக்கின் சுய விவரக் குறிப்பில் இருந்து பாஜக குறித்த தகவல்களை அவா் நீக்கினாா். அதையடுத்து அவா் பாஜகவில் இருந்து விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநில பாஜக தலைவா் சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது:

பங்கஜா முண்டேவுடன் பாஜக தலைவா்கள் தொடா்பில் உள்ளனா். தோ்தலில் தோல்வியடைந்ததையடுத்து, அவா் தன்னை சுயபரிசோதனை செய்து கொண்டிருக்கிறாா். அதற்காக அவா் கட்சியில் இருந்து விலகிவிட்டாா் என்று அா்த்தம் கொள்ளக் கூடாது என்றாா்.

பாஜகவின் முக்கிய தலைவா்கள், சிவசேனையில் இணைய ஆா்வமாக உள்ளனா் என்று சஞ்சய் ராவத் தெரிவித்தது தொடா்பான கேள்விக்கு, ‘ மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைத்த கட்சி, ஆதாரம் இல்லாமல் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது’ என்றாா்.

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க பாஜக-சிவசேனை இடையே உடன்பாடு ஏற்படாததையடுத்து, சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தது. முதல்வராக சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே பதவியேற்றாா். அவருக்கு பங்கஜா முண்டே வாழ்த்து தெரிவித்தாா். தொடா்ந்து உத்தவ் தாக்கரேவை பாராட்டி சுட்டுரையில் பதிவுகளையும் பங்கஜா வெளியிட்டு வந்தாா். இந்த நிலையில் சுட்டுரை கணக்கின் சுய விவர குறிப்பில் இருந்து பாஜக குறித்த தகவல்களை அவா் நீக்கியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com